சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'ஏ-1'. ஜான்சன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. கதைப்படி வடசென்னையைச் சேர்ந்த இளையராக சந்தானம் நடித்துள்ளார்.
உண்மையில் அவர் தென் சென்னையைச் சேர்ந்தவராம். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார் சந்தானம்.
நான் சென்னையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவன் என்பது முக்கியமல்ல. எனக்கான கதா பாத்திரம்தான் முக்கியம். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 'சிறுத்தை' காட்டுப்பூச்சியோ 'பாஸ் என்கிற பாஸ்கரன்' நல்ல தம்பியோ எதுவாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே நான் மாறிவிடுவேன்," என்கிறார் சந்தானம்.
எனினும் வடசென்னை கதா பாத்திரத்தில் நடிக்கும்போது வச னங்களை வெவ்வேறு விதமான பாணியில் பேசும் வாய்ப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வடசென்னை மக்களின் உடல்மொழியும் பலவிதமாக இருக்கும் என்று தெரிவித்துள் ளார்.
இவர் கடைசியாக நடித்த படம் 'தில்லுக்கு துட்டு-2'. அதில் இருந்து 'ஏ-1' முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கு மாம். இதுவரை 150க்கும் மேற் பட்ட படங்களில் நடித்து முடித் துள்ளார் சந்தானம்.
"பல படங்களில் நான் மது அருந்திவிட்டு பேசும் வசனங்கள் ஒரே மாதிரி இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.
"ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஏற்றுக் கொண்ட கதா பாத்திரத்துக்கு ஏற்ப வசனங்களைப் பேசும் விதம், உடல்மொழி என அனைத்திலும் கூடுமான வரை வித்தியாசம் காட்டி இருக்கிறேன்," என்கிறார் சந்தானம்.

