ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற போராடிய தனுஷ்

ஆங்கிலத்தில் பேசுவதற்கும் அம்மொழியைப் புரிந்து கொள்வதற்கும் தாம் நிறைய மெனக்கெட்டதாகக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

அண்மைய பேட்டி ஒன்றில் கடந்த 2005ஆம் ஆண்டில் தமது ஆங்கில அறிவு மிக மோசமாக இருந்தது என்றும் மனந்திறந்து கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ திரைப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தனு‌ஷின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்து உற்சாகமாக விவாதித்து வரு கின்றனர். இந்நிலையில் ஆங்கிலப் படத்தில் நடிக்கும் விருப்பமிருந்ததால் அம்மொழியை சரிவரக் கற்றுக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டதைத் தனது பேட்டியில் விவரித்துள்ளார் தனுஷ்.

“2005ஆம் ஆண்டு துவக்கத்தில் நான் பேசும் ஆங்கிலம் மோசமாக இருந்தது. இதை நன்கு உணர்ந்திருந்தேன். இதையடுத்து இந்தக் குறை பாட்டைச் சரிசெய்ய நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படித்தேன். ஒரு புத்தகத்தை முடிக்க 6 மாதங்களுக்கு மேல் ஆகும். புத்தகத்தின் ஒரு பகுதியை முடிக்கும் முன்பே தூங்கிவிடுவேன்,” என்கிறார் தனுஷ்.

எனினும் ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள கதை கள் தமது ஆர்வத்தைத் தூண்டியதாகக் குறிப்பிட் டுள்ள அவர், இந்த ஆர்வம் காரணமாக புத்தகங் களை வாசிப்பது என்பது தமக்கு ஒரு பழக்கமாகி விட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னாட்களில் ஆங்கில அறிவை மெல்ல வளர்த்துக் கொண்டதால் அம்மொழியில் வெளியான புத்தகங்களின் தேவை குறைந்ததாகவும் தெரி வித்துள்ளார்.

‘புதுப்பேட்டை’ படத்தில் நடித்துக் கொண்டி ருந்தபோது இவரது நண்பர்கள் பலர் ‘தி டாவின்ஸி கோட்’ புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தனராம். இதனால் அந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது எனும் ஆர்வம் தனுஷ் மனதிலும் தலைதூக்கியுள்ளது.

உடனடியாக அந்தப் புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாங்கிப் படித்திருக்கிறார். அந்தப் புத்தகம் தனது மன ஓட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்ததாகவும் சொல்கிறார்.

“நல்லவேளையாக அந்தப் புத்தகத்தை நான் படிக்க நேர்ந்தது. அதுதான் எனக்குள் இருக்கும் வாசகனைத் தட்டி எழுப்பியது. அதன் பிறகு பல வகையான புத்தகங்களைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.

“படிக்காமல் எவ்வளவு நேரத்தை வீணடித்தி ருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரியவந்தது. மேலும் படிக்க வேண்டியது கடலளவு மிச்சம் இருக்கிறது என்பதும் புரிந்தது,” என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேடித் தேடிப் படித்த புத்தகங்களும் தமது தீவிர முயற்சியும்தான் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள உதவியதாகக் குறிப்பிட்டுள் ளவர், இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலம் தெரியவில்லை என் றால் மரியாதைக் குறைவாகப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

‘பக்கிரி’ படப்பிடிப்புக்காக ஐரோப்பா சென்ற­போது முழுக்க முழுக்க ஆங்கிலத் தில் தான் உரையாடினாராம். இவர் ஆங்கிலம் பேசுவதைக் கண்டு அங்கு பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்­கள். “பல மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது தான். அதற்காக ஒரு மொழி தெரியவில்லை என்றால் மரி யாதை குறைவாகப் பார்க்க வேண்டிய அவசிமில்லை. என் னைப் பொறுத்தவரை ஆங்கி லம் என்பது தொடர்புக்கான ஒரு மொழி மட்டுமே,” என்கிறார் தனுஷ்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் ‘அசுரன்’ வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார் தனுஷ்.

இந்தப் படம் அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். படக்குழுவினர் மத்தியிலும் இப்படியொரு பேச்சு உள்ளது.

தனுஷ் முகம் மின்னு வதைப் பார்த்தால் அவருக்கும் அந்த நம்பிக்கை இருப்பது நன்றாக தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!