சமூக ஊடகங்கள் அனைத்துத் தரப்பினருக்குமே பயன்படுவது நல்ல விஷயம் என்கிறார் ரகுல் பிரீத் சிங். எனினும் நாட்டிலுள்ள வேலையில்லாத நபர்களும் அவற்றைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
"வேலையில்லாதவர்களின் பயன்பாட்டுக்கு என்றே கைபேசி நிறுவனங்கள் சில இணைப்புகளைத் தருகின்றன.
"அவற்றைப் பயன்படுத்தி பிறரைப் பற்றியும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிப்பதையே இவர்கள் வேலையாகக் கொண்டுள்ளனர்.
"நான் வெளியிட்ட சில புகைப்படங்களைப் பார்த்துவிட்டு என்னை ஆபாசமாக வசைபாடுவது, தேவையில்லாமல் விமர்சிப்பது என்று சிலர் தவறாக நடந்து கொள்கின்றனர்.
அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் எல்லோரையுமே திருப்திபடுத்த இயலாது," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

