ஸ்ரீரெட்டி: தண்டனை என்பது அவசியம்

ஸ்ரீரெட்டி: தண்டனை என்பது அவசியம்

1 mins read
653b738c-01c6-42db-9f29-892c233cd740
-

சிறு குழந்தைகளுக்கு அனைவரும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தெலுங்கானாவில் பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தம்மை வெகுவாகப் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

"இத்தகைய செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்களை பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் வைத்து துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொல்ல வேண்டும்.

"அப்போது தான் காமக் கொடூரர்களுக்கு பயம் வரும். இந்த விஷயத்தில் இந்தச் சமூகம் தயங்கக் கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் சட்டத்தின் மீதான மரியாதை நீடித்திருக்கும்.

"பச்சிளம் குழந்தையை சீரழிக்க எப்படித்தான் மனம் வந்ததோ.

"பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிலர் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கவில்லை," என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.2019-06-28 10:10:00 +0800