மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள அனுஷ்கா, முன்பு போலவே உற்சாகமாகக் காணப்படுகிறாராம். தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்வதில் முனைப்பாக உள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்ற போது காலில் அடிபட்டுள்ளது. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.
அடுத்த சில தினங்களில் காயம் ஆறிய பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே நேரடித் தமிழ்ப் படம் ஒன்றிலும் நடிப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல். இனி சவாலான வேடங்களிலும், உடலை வருத்தும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என அனுஷ்கா முடிவெடுத்து இருப்பதாகத் கூறப்படுகிறது.

