'உன்னதமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்'

'உன்னதமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்'

1 mins read
565a2439-07a7-483d-90f7-8cbaa215fd92
-

'ஹவுஸ் ஓனர்' படத்தில் நடித்தது, ஏதோ ஒரு நடிப்புப் பள்ளியில் படித்து போன்ற அனுபவத்தைத் தந்துள்ளது என்கிறார் கிஷோர்.

மிகவும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் நடிப்பதன் மூலம் பல்வேறு உன்னதமான விஷயங்க ளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"லட்சுமி ராமகிருஷ்ணன் மிக வும் அசாதாரண படைப்பாளி. அவருடன் பணியாற்றும் அனைவ ருமே அதை ஒப்புக்கொள்வார்கள்.

பன்முகம் கொண்ட அவரால் மேலும் பல அற்புதமான படங்களை உருவாக்க முடியும். இயக்கம் மட் டுமின்றி ஒரு படத்தின் உருவாக் கத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களி லும் அவரால் கவனம் செலுத்த முடிகிறது," என்கிறார் கிஷோர்.