அமலா பால்: நான் விலகவில்லை; விலக்கி விட்டனர்’

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும் தன்னிடம் எதுவும் கூறாமலேயே தன்னைப் படத்தில் இருந்து விலக்கியுள்ளனர் என்றும் நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

"ஆடை’ படத்தின் கவர்ச்சியான முன்னோட்டக் காட்சியைப் பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையைக் காட்டுகிறது.

"நான் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பினார்," என்று அமலா பால் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தற்போதும் நான் அவரது ரசிகை என்றும் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.

இப்போது இப்படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ள அமலா பால், அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

"மும்பையில் எனது தனிப்பட்ட செலவில் நான் 'ஷாப்பிங்' செய்துகொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி தகவல் அனுப்பினார்.

"ஆடை' படத்தின் முன்னோட்ட காட்சிகளைப் பார்த்தபிறகுதான் தன்னைப் படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்.

"நான் தயாரிப்பு நிறுவனத்துடன் நட்புரீதியாக இருக்கவில்லை என்று கூறி என்னை இப்படத்திலிருந்து நீக்கிவிட்டு எனக்கு பதில் மேகா ஆகாஷை கதாநாயகியாக நடிக்கவைக்க முடிவு எடுத்துள்ளனர்.

"நான் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கியுள்ளது.

"ஒத்துழைப்பு கொடுக்காத குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் என்று ஒருவருமே என்னிடம் சொன்னது இல்லை.

"எனது எல்லா படங்களின் பட நிறுவனங்களுக்கும் நான் ஆதரவாகவே இருந்துள்ளேன்.

"பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் இருந்ததால் அவருக்கு கடன் கொடுத்து இருக்கிறேன்.

"அதோ அந்த பறவை போல’ படப்பிடிப்பில் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்று கருதி சிறிய அறையில்தான் தங்கியிருந்தேன்.

"ஆடை' படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன்.

"தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்கமுடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை," என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

ஒருவரை ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அவரை வேண்டாம் என்று கூறி கழற்றி விட்டு அவரது எதிர்கால வாழ்க்கையை இருட்டடிப்பு செய்யும் வகையில் பாழாக்க நினைப்பது கொஞ்சமும் நியாமில்லாதது என்று அமலா பால் வேதனை தெரிவித்துள்ளார்.

Article Hard Regwall
 
Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
அண்மைய காணொளிகள்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!