'லாபம்' படத்திற்காக புதிய தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதி தோன்றும் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
'லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.

