படப்பிடிப்பின்போது தமக்கு விபத்தில் கால் எலும்பு முறிந்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள தாம் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். தாம் விபத்தில் சிக்கியதாக நினைத்து தம்மிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் டுவிட்டர் பதிவு ஒன்றில் அனுஷ்கா மேலும் குறிப்பிட்டுள்ளார். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா விபத்தில் சிக்கியதாக அண்மையில் தகவல் பரவியது.
அனுஷ்கா: விபத்தில் சிக்கவில்லை
1 mins read
அனுஷ்கா -

