கீர்த்தி பாண்டியன்: முதல் படமே எனக்கு வரமாக அமைந்தது

கீர்த்தி பாண்டியன்: முதல் படமே எனக்கு வரமாக அமைந்தது

1 mins read
da5fc6d1-6d2f-4dcc-b7ed-2c65fb9382d0
-

தான் நடித்த முதல் படமே தனக்கு வரமாக அமைந்ததாகச் சொல்கிறார் கீர்த்தி பாண்டியன்.

அண்மையில் வெளியான 'தும்பா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்த இவர், நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், அடிப்படையில் ஒரு நடனக் கலைஞராம்.

"என் தந்தை எனக்கும் எனது சகோதரிக்கும் முழுச் சுதந்திரம் தந்து வளர்த்திருக்கிறார். அவரது கனவுகளை எங்கள் மீது திணிக்க மாட்டார். எனது திரைப் பிரவேசத்திலும் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

"தொடக்கத்தில் என்னைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அப்போது மேடை நிகழ்ச்சி களில் அதிக கவனம் செலுத்திய தால் எந்த வாய்ப்பையும் ஏற்க முடியவில்லை.

"பின்னர் தும்பா பட வாய்ப்பு தேடி வந்தது. இயக்குநர் ஹரீஷ் இப்படத்தின் கதையைக் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே நடிக்க சம்மதித்தேன்.

"திரைத்துறை மீது அதிக ஆர்வம் இருந்ததால் நடிக்க ஆரம்பித்தேன். விருப்பமான விஷயத்தைச் செய்வதால் உற்சாக மாக உணர்கிறேன்.

"இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றெல்லாம் நான் வகுத்துக்கொள்ளவில்லை. எது போன்ற வேடம் ஏற்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

"எனக்கு பிடித்த நடிகை ராதிகா ஆப்தே. அவர் மிகவும் திறமையான நடிகை," என்கிறார் கீர்த்தி பாண்டியன்.