அமலா பாலுக்கு ஆதரவு

அமலா பாலுக்கு ஆதரவு

3 mins read
3a2c9831-a31b-47bd-88ec-0f552d5790e3
அமலா பால் -

விஜய் சேதுபதி படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டது கோடம்பாக்க வட்டாரங்களில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தரப்பினர் படக்குழுவின் முடிவை ஆதரிக்கும் அதேவேளையில், மற்றொரு தரப்பு அமலாபாலுக்கு ஆதர வாக உள்ளது. இந்நிலையில் அமலா நீக்கப்பட்டது நியாயமற்ற செயல் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தாம் நீக்கப்பட்டது குறித்து அமலா பால் அறிக்கை வெளியிட்டது மிக தைரி யமான செயல் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் புதுப்படம் ஒன்றில் அமலாபாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தனர். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப் படத்தை இயக்குகிறார். இதில் 'மீகாமன்', 'தடையற தாக்க' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனிதான் வில்லன்.

கடந்த 14ஆம் தேதி இப்படக்குழு படப்பிடிப்பைத் துவங்கியது. பழனி வட்டாரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்படக்குழு வினர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்‌ஷீட் பிரச்சினை காரணமாக அமலாபால் இப்படத்திலிருந்து விலகு வதாகவும் அவருக்குப் பதிலாக நேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது. சூட்டோடு சூடாக நேகா ஆகாஷ் படப்பிடிப்பிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் 'ஆடை' படத்தில் தாம் நடிப்பதன் காரணமாகவே விஜய் சேது பதி படத்திலிருந்து தம்மை நீக்கி இருப்பதாக அமலாபால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை திரையுலக வட்டாரங்களில் புதிய விவாதங்களை எழுப்பி உள்ளது.

'ஆடை' படத்தில் முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்காமலேயே விஜய் சேதுபதி படக்குழுவினர் தம்மை நீக்கி யது நியாயமான முடிவல்ல என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமலாபாலுக்கு ஆதர வாக குரல் எழுப்பியுள்ளார் விஷ்ணு விஷால். ஒரு நடிகை இவ்வாறு துணிந்து பேசியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

"நடிகர்கள் பக்கம்தான் தவறு இருக் கிறது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. பலமுறை இதுபோன்ற சம்ப வங்கள் நடந்துள்ளன. எத்தனை தயாரிப் பாளர்களால் நான் மோசமாக நடத்தப் பட்டேன் என்பது குறித்து பலமுறை வாய் திறக்க நினைத்துள்ளேன்.

"ஆனால் அவ்வாறு செய்ய முடிய வில்லை. எனினும் எப்போதுமே தயாரிப் பாளர்களை முதலாளி என்று மரியாதை யாகத்தான் நான் குறிப்பிட்டு வந்தி ருக்கிறேன்," என்று விஷ்ணு விஷால் தமது சமூக வலைத்தள பகக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாணயத்திற்கு இருபக்கம் என்பதுபோல் சினிமா துறையி லும் சில அற்புதமான தயாரிப்பா ளர்கள் இருப்பதாக குறிப்பிட் டுள்ள அவர், அத்தகைய தயாரிப்பாளர்களுடன் பணி யாற்றும் நல்வாய்ப்பு தமக்கு அமைந்ததாகவும் தெரிவித் துள்ளார்.

"உணர்வு, தொழில், உடல் ரீதியிலும் நடிகர்களுக்கு எதிராக சில அநீதிகள் நடைபெறுகின்றன. அவை குறித்துப் பேசுவதற்கான நேரம் வந்துவிட்டது," என்று தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

அண்மைய சில மாதங்களுக்கு முன்பு அமலா பாலும் விஷ்ணு விஷாலும் காத லிப்பதாக ஒரு தகவல் பரவி யது. ஆனால் இதுகுறித்து இருவருமே கருத்து தெரி விக்க மறுத்து விட்டனர். இத்தகைய சூழ்நிலை யில் விஷ்ணு விஷால் வேறு ஒரு வரைக் காதலிப்ப தாகவும் கூறப்பட்டது.

தற்போது அமலாவுக்கு ஆதரவாக அவர் கருத்து தெரி வித்துள்ளார்.

கொசுறு: இதற் கிடையே 'ஆடை' படத்துக்கு விநியோ கஸ்தர்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறப் படுகிறது.

இத்தகவல் அமலாவுக்கும் படக் குழுவினருக்கும் மகிழ்ச்சி அளித் திருப்பதாகக் கூறப்படுகிறது.

2019-07-01 06:00:00 +0800