இனி கதாநாயகனாக நடிக்கப் போவதில்லை என்று நகைச்சுவை நடிகர் யோகி பாபு அதிரடியாக முடிவெடுத்துள்ளதை அறிந்து திரைத்துறையே வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது.
யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் 'தர்மபிரபு'. அண்மையில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகைச்சுவைப் படமான இதில் யோகி பாபு எமதர்மனாக நடித்து, தமிழக அரசியல்வாதிகளை படம் முழுவதும் நையாண்டி செய்துள்ளார்.
இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து திரை அரங்கத்தில் பார்த்தார் யோகி பாபு. அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தேன். அரங்கமே சிரிப்பொலியில் மூழ்கி இருந்தது.
"பல இடங்களில் கைதட்டிச் சிரித்ததைப் பார்க்க முடிந்தது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்குப் பிறகு கதாநாயக னாக நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்துக்கே கதாநாயகனாக இருக்கும் எமதர்மன் வேடத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம். இனி வழக்கம்போல நகைச்சுவை மட்டும்தான் செய்வேன். சிவகார்த் திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிக னாக நடிப்பேன்," என அவர் கூறினார்.
யோகி பாபுவின் இந்த முடிவு தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சோகத்தை அளித்துள்ளது. 'தர்மபிரபு' படத்தைப்போலவே, யோகி பாபு கதையில் நாயகனாக நடித்துள்ள படம் 'கூர்கா'. அந்தப் படமும் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

