நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'என்.ஜி.கே' படம் தோல்விப் படமாக அமைந்தது. அதற்கு முன்பு சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. அதனால் சூர்யா ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.
தற்பொழுது கே.வி.ஆனந்த இயக்கத்தில் நடிகர் மோகன்லால், ஆர்யாவுடன் சூர்யா நடித்து வரும் படம் 'காப்பான்'. தெலுங்கில் இந்தப் படம் 'பந்தோபஸ்த்' என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் சூர்யா தன் சொந்த குரலில் பேசியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் சூர்யாவுக்கு என்று தனி மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்களுக்கு உரிய மார்க்கெட் சூர்யாவுக்கும் இருந்த நிலையில் 'என்.ஜி.கே' படம் அந்த மார்க்கெட்டை கெடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் இழந்த மார்க்கெட்டை மீட்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இப்படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. அண்மையில் 'பந்தோபஸ்' படத்தின் முதல் சுவரொட்டியை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டார்.

