பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் 'காதல் முன்னேற்ற கழகம்'

பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் 'காதல் முன்னேற்ற கழகம்'

1 mins read
6db2ea4f-e74d-473a-9bee-cbc749008b84
பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி -

உண்மையான நட்பை விளக்கும் படமாக உருவாகி வருகிறது 'காதல் முன்னேற்ற கழகம்'. மாணிக்க சத்யா இயக்குகிறார்.

இதில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன், சாந்தினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், முனிஸ் ராஜா, அமீர் உள்ளிட்டோரும் இதில் உள்ளனர். படம் குறித்து சுவாரசியமாக விளக்குகிறார் இயக்குநர் மாணிக்க சத்யா.

"இது ஒரு நகைச்சுவைப் படம் தான். எனினும் நல்ல கருத்தைச் சொல்லும் படைப்பு. நட்பு என்பது மிகவும் புனிதமானது. அந்த நட்பு எனும் வளையத்துக்குள் ஏற்படும் நம்பிக்கைத் துரோகம் தரும் வலியை இப்படம் விளக்கும்.

"1980ஆம் ஆண்டுகளில் நடக் கும் கதை இது. நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகராக வருகிறார் கதாநாயகன். எந்த வேலைக்கும் போகாமல் மனம் போல் சுற்றித்திரிகிறார். அவரைப் போலவே சிகையலங்காரம் செய்வது, ரசிகர் மன்றம் வைத்துக்கொள்வது என பொழுதைக் கழிக்கிறார்.

"இந்நிலையில் நெருக்கமான நண்பர்களே நாயகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். இதன் பின்னர் அவர் என்ன செய்கிறார் என்பதே கதை.

"நாயகி சாந்தினி ஆசிரியையாக வருகிறார். பி.சி.சிவன் இசையில், யுகபாரதி எழுதியுள்ள பாடல்கள் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

"நகைச்சுவைக் காட்சிகள் கலந்த இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். விரைவில் உலகம் முழுவதும் வெளியாகிறது," என்கிறார் மாணிக்க சத்யா.