போதை ஏறி புத்தி மாறி

போதை ஏறி புத்தி மாறி

2 mins read
4f9214b7-dd73-45ad-b5b0-c1255b68c9d5
பிரதாயினி சுர்வா -

'போதை ஏறி புத்தி மாறி' என்ற வித்தியாசமான தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி உள்ளது. வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தில் பிரதாயினி சுர்வா, துஷாரா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தீரஜ் நாயகனாக நடிக்க சந்துரு கே.ஆர். இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதாயினி சுர்வா, சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தமக்கு அறவே இல்லை என்றார்.

"விளம்பரங்களில் நடித்திருப்பதால் ரசிகர் களுக்கு என்னைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந் திருக்கும். அவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான முகமாக இருக்கிறேன். இந்நிலையில் இயக்குநர் சந்துரு என்னை அணுகினார்.

"சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லாததால் நான் எந்த இயக்குநரிடமும் அதற்கு முன்பு கதை கேட்டதே இல்லை. இயக்குநர் சந்துருவிடம் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்தேன். அவரோ தனது கதையைக் கேட்ட பிறகு முடிவெடுக்குமாறு வற்புறுத்தினார். அதனால் கதை கேட்க நேர்ந்தது.

"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சந்துரு சொன்ன கதையைக் கேட்டதும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்பட் டது. எனவே நடிகர் மைம் கோபியிடம் சில நாட்கள் பயிற்சி பெற்றேன். இதற்கு முன்பு கேமரா முன்பு நின்றதற்கும், இப்போது நிற்பதற்கும் நிறைய வித்தியாசத்தை உணர முடிந்தது. உண்மையில் இது வித்தியாசமான அனுபவம்.

"மேலும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும். அடுத்து என்ன நடக்குமோ என படத்தில் நடித்த நானே அதிகம் யோசித்தேன். எனவே ரசிகர்களும் ஒவ்வொரு காட்சியையும் ஆர்வத்துடன் எதிர்நோக்குவர்," என்கிறார் பிரதாயினி சுர்வா.

மற்றொரு நாயகியான துஷாரா நடிகையாக வேண்டும் என்பதுதான் தமது சிறு வயது கனவு என்றார். அந்த விருப்பம் 'போதை ஏறி புத்தி மாறி' மூலம் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். இப்படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றி இருக்கி றாராம். எனினும் தமது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதியும் என்கிறார்.

"சிறு வேடம் என்றாலும் ரசிகர் களைக் கவர முடியும் என உறுதி யாக நம்பினேன். ஜோதிகா சிம்ரன் போன்றவர்கள் கூட சிறு கதாபாத்திரங்களில் தோன்றி தங்களது நடிப்பால் ரசிகர்களை அசரடித்துள் ளனர்.

"என்னாலும் அப்படிச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில்தான் நடித் துள்ளேன்" என்கிறார் துஷாரா.