சல்மானுக்கு பிணை ரத்தாகலாம்; நீதிமன்றம் எச்சரிக்கை

சல்மானுக்கு பிணை ரத்தாகலாம்; நீதிமன்றம் எச்சரிக்கை

1 mins read
26583b30-04c4-4bca-ac18-e38081a6c5aa
-

மான் வேட்டை வழக்கு தொடர்பில் நடிகர் சல்மான் கான் இனி மற்றொரு முறை ஜோத்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால் அவரது பிணை ரத்து செய்யப்படும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்றாவது முறையாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.

'பிளாக்பக்ஸ்' என்ற அந்த அரியவகை மானை வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். 2018ஆம் ஆண்டில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்னை விதிக்கப்பட்டது. சிறையில் இரண்டு நாட்களைக் கழித்த பின்னர் அவர் 50,000 ரூபாய் பிணையில் வெளிவந்தார்.

2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 300 உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவப்போவதாக அந்த 53 வயது நடிகர் கூறியுள்ள வேளையில் நீதிமன்றத்தின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.