நடிகர் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் #பாக்ஸர் திரைப்படத்தின் 'முதல் பார்வை' சுவரொட்டி வெளியாகியுள்ளது. அவருடன் 'இறுதி சுற்று' புகழ் ரித்திகா சிங் இணைந்து நடிக்கிறார்.
சுவரொட்டிகளில் முகத்தழும்புகளுடன் அருண் விஜய் தத்ரூபமாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார். இந்த வேடத்திற்காக அவர் சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்னாமுக்குச் சென்று அங்கு சண்டைக்கான பயிற்சிகளை மேற்கொண்டார் அந்த 41 வயது நடிகர்.
டி இமானின் இசையில் உருவான இப்படம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

