'பாக்ஸர்' படத்தின் முன்னோட்ட சுவரொட்டி தங்களுக்கே தெரியாமல் திடீரென்று வெளியான தைக் கண்டு தாங்கள் அதிர்ந்துபோய் இருப்பதாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முன்னோட்ட சுவரொட்டி நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது. அதைப் பார்த்து தானே அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக நடிகர் அருண் விஜய் நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டு அதில் பதிவிட்டுள்ளார்.
"பாக்ஸர் படத்தின் முன்னோட்ட சுவரொட்டி திடீரென வெளியானது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதை பெரிய பரபரப்புடன் வெளி யிடலாம் என இருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே இக்காட்சி கசிந்துவிட்டதால் இப்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள் ளது," என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அருண்விஜய் கூறுகையில், "மக்கள் மனதில் நல்லதொரு எதிர்பார்ப்பை விதைத்துக் கொண்டிருக்கும் ஒரு படம், அது வெளியாவதற்கு முன்பே எந்த ஒரு சுவாரசியமும் இன்றி மக்களுக்குத் தெரியவந்தால் அதில் என்ன பயன் உள்ளது?
"நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர் கள், இதர ஊழியர்கள் போட்ட உழைப்பிற்கு எந்த ஒரு பயனும் பலனும் கிடைக்காமல் போய் விடும்," என்று வருத்தம் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.
"மாஃபியா படத்தின் முன்னோட்டக் காட் சியை சில தினங்களுக்கு முன்னர்தான் வெளியிட்டோம். இதன் காரணமாக 'பாக்ஸர்' படத்தின் சுவ ரொட்டியை சில மாதங்கள் கழித்து வெளியிடத் திட்டமிட்டிருந்தோம்.
"இந்நிலையில் சுவரொட்டி திடீரென கசிந்தது வருத்தமாக உள்ளது. இருப்பினும் மக்கள் அந்தக் காட்சி குறித்து பதிவிடும் ஆதரவான கருத்துகள் மனதிற்கு இதம் தருகிறது. இப்படத்திற்காக ஒன்பது மாதமாக கடினமாக உழைத்துள்ளேன்," எனக் கூறினார்.
தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகண்டவர் அருண் விஜய். 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்' என்று தனது இரண்டாம் கட்ட திரைப்பயணம் மூலம் தொடர்ச்சி யாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.
'பாக்ஸர்' படத்தைப் பாலாவின் உதவியாளராக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார். மீரா எனும் வேடத்தில் அருண் விஜயின் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.
அண்மையில் இந்தப் படத்தின் பூசையில் கூட உடம்பு முழுக்க அருண் விஜய் பச்சையும் குடுமி யுமாக வந்து அசத்தியிருந்தார்.
இப்படத்திற்காக சூர்யாவின் 'ஏழாம் அறிவு' படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் குத்துச்சண்டை பயிற்சி எடுத்துள்ளார்.
இந்நிலையில், திடீரென 'பாக்ஸர்' முன்னோட்ட சுவரொட்டி இணையத்தில் கசிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் பின்னர் அதிகார பூர்வமாக வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

