'மீரா மிதுனை குறைசொல்ல ஒன்றுமில்லை'

'மீரா மிதுனை குறைசொல்ல ஒன்றுமில்லை'

2 mins read
db9ce4da-0c43-47d2-a9d9-d9389c0fcbbb
மீரா மிதுன் -

'போதை ஏறி புத்தி மாறி' பட இயக்குநர் சந்துரு கே.ஆர். இப் படத்தில் நடித்துள்ள மீரா மிதுன் மிகவும் நல்ல பெண், அவரைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நற்சான்றிதழ் கொடுத் துள்ளார்.

கூடையில் ஒரு பழம் கெட்டுப்போயிருந்தால் அதற்காக கூடையில் உள்ள அத்தனை பழங்களும் கெட்டுப் போய்விட்டது என்று கூறிவிட முடியாது. எந்த ஒரு மனிதருமே 100% நல்லவராக இருக்கமுடியாது. கொஞ்சம் நிறை, கொஞ்சம் குறை இருக்கத் தான் செய்யும் என்கிறார் இயக்குநர் சந்துரு கே.ஆர்.

இந்நிலையில், ரூ.50,000 கொடுக்கல் வாங்கல் பிரச் சினை தொடர்பாக தி.நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுனை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாகும்படி சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பின் முன்னிலையாவதாக மீரா மிதுன் தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர்.

"பிக்பாஸ்' வீட்டில் சித்திரிக்கப்படுவது போல் மாடல் அழகி மீரா மிதுன் கெட்டவர் அல்ல என்று கூறியுள்ள இயக்குநர் சந்துரு, "போதை ஏறி புத்தி மாறி' படத்தில் "பிரதாயினி, துஷாரா, மீரா மிதுன் என்று மூன்று நாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர் களில் மீரா மிதுனின் பாத்திரம் படத்தின் திருப்பத் துக்கு பெரிதும் கைகொடுக்கும். நான் கேட்ட உடனே நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார்.

"பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போனபிறகு மீரா மிதுன் பற்றி நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வெளியே பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் அவர் அப்படி அல்ல. ஒருவரது பிழைப்பில் மண் போடக்கூடாது. என்னிடம் பழகிய வரை மீரா நல்லவர்தான்," என்கிறார்.