தோல்விப் படங்களில் நடித்தும் முதல் இடத்தில் இலியானா

தோல்விப் படங்களில் நடித்தும் முதல் இடத்தில் இலியானா

1 mins read
fa5f3c78-d07d-4a51-81b8-03150e2049a6
இலியானா -

சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் ரசிகர்களில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட அனைவரை யும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இலியானா முதலிடத்தில் உள்ளார்.

இலியானா பற்றிய தகவல்களை அறியத்தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அண்மையில் எடுத்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருப்பதால், நடிகைகள் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை இவற்றில் பதிவிடு கின்றனர். இதற்காக ரசிகர்களும் அவர்களை வலைத்தளப் பக்கங் கள் வழி பின்தொடர்கின்றனர்.

இலியானா அண்மைக்காலமாக படங்களில் நடிக்கவில்லை. ஆனா லும் ரசிகர்கள் மத்தியில் அவரது மவுசு குறையவில்லை என்பதை ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

"நான் தோல்விப் படங்களில் நடித்தும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக இருக் கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருந் தாலும் ஒவ்வொரு படத்தையும் நான் புதிய படம் போலத்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு வெள் ளிக்கிழமையும் சினிமா துறையில் புதிய கதாநாயகி வந்துகொண் டிருக்கும் நிலையிலும் ரசிகர்கள் என்னைப் புதிய கதாநாயகியாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக் கிறது. இதனால் இன்னும் கூடுத லாக திறமையை நிரூபிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது," என்று இலியானா கூறியுள்ளார்.

இலியானா தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு இந்தியில் தலைகாட்டி குறிப்பிட்ட சில படங்களில் நடித்துப் பிரபலமானார் என்பது குறிப் பிடத்தக்கது.