உமாபதி ராமையா நடிப்பில் உருவாகும் புதுப்படத்துக்கு 'தண்ணி வண்டி' என தலைப்பு வைத்துள்ளனர்.
ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண்கோபி ஆகிய இயக்குநர் களிடம் பணியாற்றிய மாணிக்க வித்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
'வில் அம்பு' படத்தில் நடித்த சம்ஸ்கிருதிதான் இப்படத்தின் நாயகி.
தற்போது தமிழகத்தில் நில வும் தண்ணீர் பிரச்சினைக்கும் இப்படத்தின் தலைப்புக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லையாம். கதைப்படி மதுரையின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு கதாநாயகன் தண்ணீர் விநியோகம் செய்கிறார். மேலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மது அருந்திவிட்டு கலாட்டாவில் ஈடுபடுவாராம்.
"எனவேதான் கதைக்கேற்பவும் நாயகனின் குணத்துக்கு ஏற்பவும் இந்தத் தலைப்பை வைத்தோம். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு, நெருக்கடி, மழை நீர் சேகரிப்பு என்பன போன்ற விஷயங்களை யெல்லாம் நாங்கள் தொடவில்லை.
"நாயகன் மதுவுக்கு அடிமை யானவராகவும் சித்திரிக்கப்பட வில்லை. நாயகனுக்கும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதலை நகைச்சுவையாக காட்டியிருக்கி றோம். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படைப்பாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் மாணிக்க வித்யா.

