சினிமாவில் முதலிடத்தைப் பிடிப்பதில் எல்லாம் இன்றைய இளம் நடிகைகளுக்கு ஆர்வமோ போட்டியோ இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், சமூக வலைத் தளங்களில் இவர்களுக்கு இடையிலான போட்டியில் அனல் தெரிக்கிறது. இளம் நாயகி ஷாலினி பாண்டேவை ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் அவர் தமது சமூக வலைத்தளப்பக்கம் ஒன்றில் குடும்பப் பாங்காகத் தோற்றமளிக்கும் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அவற்றைக் கண்டு உற்சாகமான ரசிகர்கள் குடும்பக் குத்துவிளக்கு என அவரைப் புகழ்ந்தனர். இந்நிலையில் அண்மையில் நீச்சல் உடையில் காட்சியளிக்கும் ஒரு புகைப்படத்தை ஷாலினி பதிவிட, அடுத்த சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் அந்தப் படத்தை விரும்புவதாகவும், ஷாலினி அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருக்குப் போட்டியாகவே ஷாலினி அவ்வப்போது அதிரடியாக புகைப்படங்களை வெளியிடுவதாகத் தகவல்.

