அமலாவுக்கு எழுந்த சந்தேகம்

அமலாவுக்கு எழுந்த சந்தேகம்

3 mins read
2dc446ff-3901-4407-81a9-72326e8fb20a
அமலா பால் -

'ஆடை' படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.

இந்நிலையில் அப்படக்குழுவினர் செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய படத்தின் நாயகி அமலா பால், திரை உலகை விட்டுவிலக நினைத்திருந்த வேளையில் 'ஆடை' பட வாய்ப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

"சினிமாவில் நடித்தது போதும் என்று முடிவெடுத்திருந்த சமயத்தில் பல கதைகள் தேடி வந்தன. பெண் அதிகாரம், பாலியல் பலாத்காரத் தால் பாதிக்கப்பட்ட பெண் அதி லிருந்து மீள்வது, கணவருக்கு உறுதுணையாக இருப்பது போன்ற கதைகள் தேடி வந்த போதிலும் மன நிறைவு ஏற்படவில்லை.

"பல கதைகளில் பொய்கள் கலந்திருந் தன. சில கதைகளில் யதார்த்தப் போக்கு இல்லை. எனவே திரை உலகில் எனக்கென கிடைத்து உள்ள இடத்தை மோசமான கதைகளில் நடித்து இழக்க விரும்பவில்லை என என் மேலாளரிடம் கூறினேன்.

"அவர் எனக்காக பல கதைகளை அனுப்பிய வண்ணம் இருந்தார். அப்படித் தான் 'ஆடை'யின் கதைச்சுருக்கம் தேடி வந்தது. ஒரே ஒரு பக்கம் படித்து முடித்துவிட்டு, இது தமிழ்ப் படமா, இந்திப் படமா, ஆங்கிலப் படமா? என்று அவரிடம் சந்தேகத்துடன் கேட்டேன்.

"தமிழ்ப் படம்தான் என்றும் ரத்ன குமார் என்ற இயக்குநர் எழுதியுள்ளார் என்றும் மேலாளர் தெரிவித்தார்," என்றார் அமலா பால்.

இந்தக் கதையைத் தயாரிக்க ஒருவர் தயாராக இருப்பதாக மேலாளர் சொன்னதும் ரத்னகுமாரை டெல்லியில் வைத்துச் சந்தித்துள்ளார் அமலா பால். 2 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஏதேனும் ஆங்கிலப் படத்தின் தழுவலா? என்று கேட்டாராம்.

அதற்கு ரத்னகுமார் இது தனது சொந்தக் கதை என்று கூறியுள்ளார். அடுத்து தயாரிப்பாளரைச் சந்திக்க விரும்பியபோது அவர் நெற்றியில் விபூதி, குங்குமம் எல்லாம் வைத்துக்கொண்டு சாந்தமாக வந்து நின்றாராம்.

படத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பு ஆடை களை உருவாக்கலாம் என்று அவர் கூற, கதை என்று வந்துவிட்ட பிறகு எதற்கும் யோசிக்கக் கூடாது என்று அவரைச் சமாதானப்படுத்தினாராம் அமலா பால்.

"இந்தப் படத்தில் ஆடையின்றி ஒரு காட்சியில் நடித்தது குறித்து பலரும் கேட்கிறார்கள். அது மிக முக்கியமான காட்சி. இதுகுறித்து இயக்குநர் தொடக்கத்திலேயே கூறிவிட்டார்.

"படப்பிடிப்பின்போது மொத்தம் 15 பேர் மட்டுமே அரங்கில் இருந்தனர். இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு உதவியாளர்கள் என அனைவருமே எனக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தனர். சரி யாகச் சொல்வதானால் மகாபாரத திரௌபதிக்கு கூட 5 கணவர்கள்தான் பாதுகாப்புக்கு நின்றனர். ஆனால் எனக்கு 15 பேர் பாதுகாப்பாக இருந்தனர்," என்றார் அமலா பால்.

படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் இவரை வெகு வாகப் பாராட்டினாராம். குறிப்பாக, கடைசிக் காட்சியில் இவரது கண்ணில் தெரிந்த பயத்தை மறக்கவே இயலாது என்றாராம். இந்தப் பாராட்டுக்கு ஒளிப்பதிவாளர் விஜய்தான் பொருத்தமானவர் என்கிறார் அமலா பால்.

படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

"ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விதி இருக்கிறது. அதன்படிதான் நடக்கும். இது ஒரு நேர்மையயான, உண்மையான படம். இதன்மூலம் கிடைத்த அனுப வங்கள் மிக வலுவானவை," என்றார் இவர்.