சிம்பு திரையுலகில் கால்பதித்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். சும்மா இருப்பார்களா அவரது ரசிகர்கள்? அவருக்காக மதுரையில் 500 அடி நீள சுவரொட்டியை நகரின் முக்கிய பகுதியில் ஒட்டி அசத்தி உள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் இந்த பிரம்மாண்ட சுவரொட்டியைப் பார்க்க முடியும். அதில் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
சிம்பு தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான 'உறவைக் காத்த கிளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் வெள்ளித்திரையில் கால்பதித்து தற்போது 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதற்குமுன் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் 440 அடி நீளமுள்ள சுவரொட்டியை வைத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை சிம்பு ரசிகர்கள் தற்போது முறியடித்துள்ளனர்.

