நித்யா: இயற்கையே எனது வழிகாட்டி

நித்யா: இயற்கையே எனது வழிகாட்டி

1 mins read
8b98725d-2851-4b53-8bc5-99cfbc7d3fb3
நித்யா மேனன் -

படப்பிடிப்பில் வேலை செய்து சோர்வாகும் போதெல்லாம் இயற்கை தனக்குரிய சக்தியைக் கொடுப்பதாகச் சொல்கிறார் நித்யா மேனன். இயற்கையை மட்டுமே தமது வாழ்வின் வழிகாட்டியாகப் பார்ப்பதாகவும் இவர் குறிப்பிடுகிறார்.

"நம்மோடு நாம் தொடர்பு கொண்டால்தான் இயற்கையோடும் நம்மால் தொடர்புகொள்ள முடியும். எனக்குத் தேவையான சக்தி எல்லாவற்றையும் இயற்கையில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறேன்.

"நடிகை என்ற வகையில் ரசிகர்களுக்கு என்னைப் பற்றி சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். வெளியில் இருந்து என்னை ஒரு நடிகையாகப் பார்த்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணங்கள் அவை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நடிகை நித்யாவாக அல்லாமல் சாதாரணமான, எளிமையான நித்யாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்," என்கிறார் நித்யா மேனன்.

தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'த அயர்ன் லேடி' படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யா மேனன். மேலும் 'சைக்கோ' என்ற தமிழ்ப் படத்திலும் இவர்தான் நாயகி. தவிர மலையாளத்திலும் இரு படங்களில் நடித்து வருகிறாராம்.