ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடும் விஜய்

ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடும் விஜய்

1 mins read
b10756fb-4264-4249-a371-618cf46562d0
-

அட்லீ இயக்கியுள்ள 'பிகில்' படத்தில் விஜய் தன் சொந்தக்குரலில் பாடவிருக்கிறார். "கூகுள் கூகுள், கண்டாங்கி கண்டாங்கி"உள்ளிட்ட சில பாடல்களை விஜய் பாடியிருக்கிறார். அவை பெரிய அளவில் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்தப் படம் காற்பந்தை மையப்படுத்துகிறது. விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடலுக்கு விஜய் பாடுவது இதுவே முதல் முறை. அந்தப் பாட்டின் பெயர் 'வெறித்தனம்' என்று படக்குழு தெரிவித்தது.