மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ்

மீண்டும் தனது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

தனுஷ் நடிப்பில் மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். அதில் முதல் படமாக அசுரன் உருவாகி உள்ளது. இரண்டாவது படத்தில் துரை செந்தில்குமார் இயக் கத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் மூன்றாவது படத் துக்காக இயக்குநர் செல்வராக வனை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தாணு. பட வேலைகளை விரைவில் துவங்க இருப்பதாக செல்வராகவன் தரப்பில் கூறப்படுகிறது.

கவிஞர் பிறைசூடன் வில்லனாக நடிக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’

ஜெகன், மனிஷாஜித், நிகிதா, அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இதில், நகைச்சுவைக் காட்சிகளும் வித்தியாசமாக இருக்குமாம். கவிஞர் பிறைசூடன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்திரஜித், சேரன் ராஜ், வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், சாம்ஸ், விவேக்ராஜ், ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கவின்சிவா இசையமைக்கும் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கி உள்ளார். இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமையும் என நாயகன் ஜெகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்

15 Oct 2019

கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்