ரகுமான் இசையில் பாடிய விஜய்

ரகுமான் இசையில் பாடிய விஜய்

1 mins read
3ba95610-c725-4ad1-925d-6b9b2f8ddb0e
-

விஜய் நடிக்கும் படங்களில் அவர் பாடுவது ஒன்றும் புதிதல்ல. எனினும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அதில் அவர் பாடுவாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொடர்ந்து ஏற்படுகிறது.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகும் 'பிகில்' படத்திலும் ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடியுள்ளார் விஜய். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர் பாடியிருப்பதாக 'பிகில்' படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, முதன்முறையாக ரகுமான் இசையில் அவர் பாடியுள்ளார். கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு 'பைரவா' படத்துக்காக பாடியிருந்தார் விஜய்.

அதன் பிறகு வெளியான 'மெர்சல்', 'சர்கார்' படங்களில் அவர் பாடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பாடியிருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.