ஜெகன், மனிஷாஜித், நிகிதா, அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இதில், நகைச்சுவைக் காட்சிகளும் வித்தியாசமாக இருக்குமாம். கவிஞர் பிறைசூடன் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் இந்திரஜித், சேரன் ராஜ், வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், சாம்ஸ், விவேக்ராஜ், ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கவின்சிவா இசையமைக்கும் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கி உள்ளார். இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமையும் என நாயகன் ஜெகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

