‘புகார் அரசி’ மீராவுக்கும் சேரனுக்கும் இடையே மோதல்

அளவுக்கு அதிகமாக யோசித்து பலரின் மீது அதிருப்தி அடைவதால் இதர பேரின் காட்டத்தைச் சம்பாதித்திருக்கிறார் 'பிக் பாஸ்' மீரா மிதுன்.  அவர் செயலில் ஈடுபடாமல் உணர்ச்சிமிக்க எண்ணங்களிலும் பேச்சுக்களிலும் உழல்வதாக ஒரு கண்ணோட்டம் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பவர் மத்தியில் நிலவுவது போலத் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கும் இயக்குநர் சேரனுக்கும் இடையே சிறு வாக்குவாதம் மூண்டுள்ளது.

வேலை செய்யாமல் தப்பித்துக்கொள்வதே மீராவின் வேலை  என்பது போல சேரன் கூறியது குறித்து மீரா அவரிடமே தனது அதிருப்தியை வெளியிட்டார். சேரன் மன்னிப்பு கேட்டபோதும் இந்தப் பிரச்சினையை மீரா மறுபடியும் கிளற, சேரன் பொறுமையிழந்து தனது குரலை உயர்த்திப் பேசினார்.  இதனைக் காட்டும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சேரன் திட்டியதில் தவறில்லை என்றும் மீரா அனாவசியமாக அவரையும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பலரையும் வம்புக்கு இழுப்பதாகவும் இணையவாசிகள் பலர் கருதுகின்றனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்று சூர்யாவை பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். கோப்புப்படம்

23 Jul 2019

'இளையர்கள் தமிழின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும்'

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம்

23 Jul 2019

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது ‘நுங்கம்பாக்கம்’