‘அரசியலுக்கு வர தயக்கமில்லை’

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் தைரியசாலியாக மாறிவிட்டார் ஓவியா. 

அரசியல், ஆன் மிகம் என்று எது குறித்தும் மனதிற்பட்ட கருத்துகளைத் தைரி யமாக வெளிப்படுத்து கிறார். அரசியலில் கால்பதிக்க வேண் டியிருந்தால் தயக்கமின்றிச் செயல்படு வாராம். 

அது மட்டு மல்ல, தமிழ் நாட்டில் தான் அர சியல் செய்ய விருப்பம் என் றும் அண்மைய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

“களவாணி-2 படத் தில் மகளிர் சுய உதவிக் குழு தலைவியாக நடித் திருக்கிறேன். அதனால் அரசியலுக்கு வரு வீர்களா என்று கேட் கிறார்கள். 

“சினிமாவை அர சியலுக்கான பயிற்சி மையம் என்று சிலர் நினைப்பது வேடிக் கையாக உள்ளது. நான் அப்படி நினைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நிலைமை காணப்படுகிறது. 

“சினிமாவில் கொஞ்சம் பிரபலமடைந்தால் உடனே அரசி யலுக்கு வந்துவிடுகிறார்கள்,” என்கிறார் ஓவியா. 

சினிமா புகழை அரசியலுக்குப் பயன்படுத்தும் எந்த ஒரு திட்டமும் இவரிடம் இல்லையாம். 

‘ஓவியா ஆர்மி’யைத் தமது சுயலாபத்துக்காகப் பயன்படுத் திக்கொள்ள விருப்பமில்லை என்று குறிப்பிடுபவர், எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால், தயக்கமின்றி அதைச் செயல்படுத்தப்போவதாகச் சொல்கிறார். 

அது மட்டுமல்ல, தமிழ்நாடுதான் தமக்கு முக்கியம் என்றும், தமிழ கத்தை விட்டு வேறு மாநிலத்தில் குடியேறும் எண்ணம் அறவே இல்லை என்றும் கூறுகிறார்.

“இது தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை. எனவே நல்லது செய்வதாக இருந்தால் அதை தமிழ்நாட்டுக்குத் தான் முதலில் செய்வேன். தமிழ் ரசிகர்கள்தான் எனக்கு அதிகம்,” என்று அடித்துச் சொல்பவர், ஒரே மாதிரியான படம், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்கிறார். 

மேலும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டவேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார். 

‘90 எம்எல்’, ‘காஞ்சனா-3’, ‘களவாணி-2’ ஆகிய மூன்று படங்களுக்கும் இடையே ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும்போது ஓவியா சொன்னது சரி என்றே மனதில் படுகிறது.  

அடுத்து கதாநாயகிக்கு முக்கியத் துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம். மேலும், மலையாளப் படம் ஒன்றும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதாம்.

“பிக்பாஸ் முதல் பாகத்தில் நான் பங்கேற்றேன். அப்போது எந்த முன் அனுபவமும் இல்லாமல், திட்டமில் லாமல் சென்றேன். 

“வெளியில் என்ன நடந்தது என்பது அறவே எனக்குத் தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதைச் செய்தேன். சுதந்திரமாக இருந்தேன். அதனால் மக்களுக்குப் பிடித்துப் போனது.

“ஆனால் இப்போது அப்படி அல்ல. என்னைக் காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். 

“என்னைப் பொறுத்தவரை இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளோ நண்பர்களோ கிடையாது. எதிரியாக இருந்தாலும் நண்பராக்கிக் கொள்வேன்,” என்கி றார் ஓவியா.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி