‘கண்ணே கலைமானே’ படத்துக்கு மேலும் விருது

கோல்கத்தாவில் நடைபெற உள்ள அனைத்துலக திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ படத் துக்கு விருது கிடைக்க உள்ளது. இத்தகவலை அப்படத்தின் இயக் குநர் சீனு ராமசாமி தெரிவித் துள்ளார்.

முன்னதாக தாதா சாஹேப் அனைத்துலக திரைப்பட விழாவில் இப்படம் விருது பெற்றது. இந் நிலையில் மீண்டும் ஒரு விருது கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக  சீனு ராமசாமி கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா இருவரும் ஜோடி சேர்ந்து நடித் துள்ள படம் ‘கண்ணே கலை மானே’. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்துக்கு ரசிகர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்திருந்தார் சீனு ராமசாமி. இதில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். 

தமன்னா வங்கி அதிகாரியாக வும் கண்பார்வை இழந்தவராகவும் நடித்து பாராட்டு பெற்றார்.

வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற இப்படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என பலரும் கணித்திருந்தனர். அதற் கேற்ப தாதா சாஹேப் அனைத் துலக திரைப்பட விழாவிலும் தற் போது கோல்கத்தா அனைத்துலக ‘கல்ட்’ திரைப்பட விழாவிலும் இப்படம் விருது பெறுகிறது.

இத்தகவல் அப்படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத் துள்ளது. விருது கிடைக்கும் தக வலை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

இதையடுத்து திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்