தீபாவளிப் போட்டியில் விஜய், சேதுபதி

விஜய் சேதுபதி யாரையும் தனக்குப் போட்டியாக கருதுவ தில்லை. விஜய்யை பொறுத்த வரை யாரும் அவருக்கு தற்போது போட்டி இல்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நடித்துள்ள படங்கள் மோத இருக்கின்றன. தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார் விஜய். இப்படம் எதிர் வரும் தீபாவளி பண்டிகையின் போது வெளியீடு காண உள்ளது.

விஜய் சேதுபதி பொறுத்த வரை ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டி ருந்தாலும், விஜய் சந்தர் இயக் கத்தில் உருவாகும் ‘சங்கத் தமிழன்’ படத்துக்கு முன்னு ரிமை அளித்துள்ளார். அந்த வகையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதில் வணிக ரீதியிலான அம்சங்கள் அதிகம் உள்ளன. மேலும் சேதுபதி இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். மறுபக்கம் ‘பிகில்’ படத்தில் விஜய்க்கும் இரட்டை வேடமாம்.

எனவே இரு படங்களுக்கும் இடையே பலத்த போட்டி இருக் கும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் இரு படங்களுமே வெற்றி பெறும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கல் நாளில், அஜீத்தின் ‘விஸ்வா சம்’, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதை மனதில் வைத்தே வரும் தீபாவளிக்கும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களை வெளியிட விநியோ கஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.2019-07-12 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்