நகைச்சுவைப் படத்தில் அஞ்சலி

முதன்முறையாக முழுநீள நகைச்சுவைப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் அஞ்சலி. இதில் யோகி பாபுவும், விஜய் தொலைக்காட்சி புகழ் ராமரும் முக்கிய கதாபாத் திரங்களில் நடிக்கின்றனர். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார்.

“அஞ்சலி இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்தி ரத்தில் நடித்ததில்லை. இதற்கு முன்பு அவர் சில கதாபாத்திரங்க ளுக்காக சில காட்சிகளில் நகைச்சுவையாக நடித்திருக்கலாம். ஆனால் இதில் படம் முழுவதுமே நகைச் சுவையை வெளிப்படுத்து வார்,” என்கி றார் கிருஷ் ணன் ஜெய ராஜ்.

கதைப்படி, கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக வும், பயிற்சி யாளராகவும் நடிக்கிறார் அஞ்சலி. இவரை யோகி பாபுவும் ராம ரும் காதலிப் பார்கள். இதனால் இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுமாம். இருவரில் யாராவது ஒருவரையா வது அஞ்சலி காதலிப்பாரா என் பதை திரையில் தான் காண முடியும்.

“இதற்கு முன்பு ‘கோலமாவு கோகிலா’வில் நயன்தாராவை ஒருதலைப்பட்சமாக காதலிப்பார் யோகி பாபு. ஆனால் அந்தப் படத்தின் சாயல் சிறிது கூட இதில் இருக்காது.

“மலைப்பாங்கான பகுதியில் முக்கிய காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடத்தை தேடி வருகிறோம்.

“இந்தக் கதையை அஞ்சலி யிடம் கூறிய போது மிகுந்த உற்சாகம் அடைந்தார். வழக்க மாக ஒரு படத்தில் நடிப்பது குறித்து உடனே முடிவெடுக்க மாட்டாராம். 

“ஆனால் இந்தப் படத்தில் தனக்கான கதாபாத்தி ரத்துடன் உடனடியாக ஒன்றிப் போக முடிந்தது என்று அவர் கூறியபோது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்கி றார் கிருஷ்ணன் ஜெயராஜ்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தை கே.எஸ்.சினிஷ் தயாரிக்கிறார். இதர கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ‘சொன்னா புரியாது’ படத்தை இயக்கி உள்ளார் கிருஷ்ணன் ஜெயராஜ்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி