இயக்குநர் பதிலால் சமந்தா அதிருப்தி

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’யை இந்தியில் ‘கபிர் சிங்’

என்ற பெயரில் மறுபதிப்பு செய்துள் ளனர். இதையும் சந்தீப் வங்கா தான் இயக்கி உள்ளார். 

இந்தியில் கதாநாயகன் பேசும் வசனங்கள், பெண் கதாபாத்திரங்கள் காட்டப்பட்ட விதம் குறித்து பெண்ணியவாதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், இந்தக் குற்றச்சாட்டுக்கு சந்தீப் வங்கா அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சந்தீப் மீது ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகியான சமந்தாவுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சந்தீப் வங்கா கூறிய பதில்கள் தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

இதையடுத்து ரசிகர் ஒருவர், ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியானபோது அந்தப் படத்தைப் பாராட்டி சமந்தா வெளியிட்ட கருத்தையும், தற்போது தெரிவித்துள்ள கருத்தையும் குறிப்பிட்டு, ‘ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு, “ஒரு படத்தை ரசிப்பதும், ஒரு கருத்தை மறுப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்,” என்று பதிலளித்துள்ளார் சமந்தா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’