செய்தியாளருடன் மோதிய கங்கனா

செய்தியாளர் ஒருவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக நடிகை கங்கனா ரணவத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்துள்ளனர்.

‘ஜட்ஜ்மென்டல் ஹை க்யா’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது ஜஸ்டின் ராவ் என்ற அந்த செய்தியாளர் சில கேள்விகளை எழுப்பிய போது, அவற்றுக்கு கங்கனா பதிலளிக்க மறுத்தார். மேலும் தனது ‘மணிகர்னிகா’ படத்துக்கு ஜஸ்டின் கடுமையான விமர்சனம் எழுதியதாக குற்றம்சாட்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது.

இந்நிலையில் தனது செயலுக்காக கங்கனா மன்னிப்பு கேட்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் அதை மறுத்துள் ளார். 

தாம் யாரையும் அச்சுறுத்தவில்லை என்றும், தன்னைப் பற்றிய செய்திகள் குறித்த அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்தியதாகவும் கங்கனா கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’