‘நடிக்கத்தெரியாத டாப்சிக்கு வாய்ப்பு தருவது வீண் வேலை’

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிப் பதற்கு தயாராகி வருவதாக நடிகை டாப்சி சமூக வலைத்தளத்தில் தக வல் பகிர்ந்துள்ளார். 

இதைப் பார்த்த இணையத்தள வாசி ஒருவர், “டாப்சிக்கு சிறிதும் நடிக்கவே தெரியாது. என்னைப் பொறுத்தவரை அவரை எல்லாம் ஒரு நடிகையாகவே கருதமுடியாது,” என்று கருத்து பதிவிட்டுள்ளார். 

“இயக்குநர் அனுபவ் சின்ஹா டாப்சிக்கு பதில் வேறு ஒரு நல்ல நடிகையைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கவேண்டும்,” என்றும்  அவர் வலியுறுத்தி உள்ளார்.

இப்படி கருத்து கூறியவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள டாப்சி, “இந்தப் படத்தில் நான்  நடிப்பதற்கு  அனைத்தும் கையெழுத் தாகிவிட்டன.

“இனி படத்திலிருந்து என்னை நீக்கமுடியாது. அடுத்த முறை வேண்டுமானால் நான் நடிப்பதை தடுக்க முயற்சிசெய்யுங்கள். இருப் பினும் அதிலும் நான்தான் வெற்றி பெறுவேன்,” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே டாப்சியை நடிகை கங்கணா ரணாவத்தின் தங்கை ரங் கோலி வெளுத்து வாங்கியுள்ளார்.

“டாப்சி எனது சகோதேரி கங்கணா ரணாவத்தின் நடிப்பை காப்பியடித்து அப்படியே அவரைப் போலவே நடிக் கிறார். டாப்சிக்கு படவாய்ப்புகள் வருவதற்கு கங்கணாவை விடவும் அவர் குறைந்த அளவு வாங்கும்  சம்பளமே காரணம். 

“அத்துடன் கங்கனாவை அச்சு அசலாக ‘மிமிக்ரி’ செய்கிறார். இதில் டாப்சியின் உண்மைத் தன்மை என்று  எதுவுமில்லை,” என பகிரங்கமாக திட்டித் தீர்த்திருக்கிறார் ரங்கோலி.

சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த டாப்சி, கங்கணாவை பற்றி மறைமுகமாக கருத்துத் தெரிவித் திருந்தாராம். அதனால் கோபம் அடைந்துள்ளார் கங்கணாவின் தங்கை ரங்கோலி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி