நாயகனை காதலித்து ஆட்டம் போட்டது சலிப்பு தட்டிவிட்டது

பல படங்களிலும் நாயகனை காதலித்து, ஓடி ஆடி விளையாடி, பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டது சலித்துப் போய்விட்டதாகவும் அதனால்தான் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் அமலாபால் கூறியுள்ளார். 

“எல்லாருக்கும் ஒரு பயணம் இருக்கும். அதுபோல் எனக்கும் ஒரு பயணம் உள்ளது. வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம நினைத்ததுபோல் அமையாதபோது நமது வாழ்க்கை திடீரென்று உடைந்து விழுவதுபோல் இருக்கும். 

“அதிலிருந்து மீண்டு எந்த வழியில் எப்படி சரியான பாதையில் போகவேண்டும் என்பது  நாம் எடுக்கவேண்டிய முடிவுதானே? எனது பிரச்சினைகளுக்கு யோகா, ஆன்மிகம் என்கிற ஒரு பாதை அமைந்தது. அதை எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்.

“பொதுவாகவே நான் யோகா பண்ணுவேன். அசைவம் சாப்பிடுவதில்லை. இனிப்பு இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறேன். 

“முக்கியமாக பாண்டிச்சேரி ஆரோவில் பக்கத்தில் குடிபோய் விட்டேன். எனது யோகா குரு அங்குதான் உள்ளார். 

“இதற்கு முன்பு டெல்லியில் குடியிருந்தேன், அங்கேயிருந்து இமயமலைக்கு அடிக்கடி போவேன். இமயமலையை எனக்கு ரொம்ப பிடிக்கும். இமயமலை அருகில் வீடு குடிபெயர்ந்து விடலாமா என்று கூட ஒருசமயத்தில் எனக்கு யோசனை இருந்தது. ஆனால் அங்கே போனால் எனது வேலை நிச்சயம் பாதிக்கப்படும். அதேசமயம் சென்னையிலும் என்னால் தங்கமுடியாது. ஏனெனில் வேலை செய்யும் இடத்தில் என்னால் தங்கமுடியாது. வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுத்தால்தான் என்னால் மறுபடியும் வேலை செய்யமுடியும்.

“சென்னை மட்டுமல்ல, எந்த நகரிலும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் முறையே இல்லை. இரவும் பகலும் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண் டிருப்பார்கள். வாழ்க்கை அப்படியே வீணாகிக்கொண் டிருக்கும். எனக்கு அது பிடிக்காது.

“ஆடை’ படத்தின் மூலம் எனது மாரத்தானை நான் முடித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த மாரத்தானை கடைசி வரை ஓடி முடித்துவிட முடியுமா என்றுதான் இருந்தது. இதன்பிறகு நான் யோசிக்க வில்லை. நான் அடுத்த படத்திற்கு நகர்ந்துவிட்டேன். 

“சிலருக்கு என்மேல நம்பிக்கை அதிகமாகலாம். சிலர் என்னை மதிக்கலாம், சிலர் என்னை வெறுக்க லாம். எல்லாரையும் திருப்திப்படுத்த ஒரு கலைஞரால் முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் என் இதயத்தில் நான் ரசிக்கப்படுகிறேன். அதுதான் முக்கியம். என்னால் அதைத்தான் கவனத்தில் கொள்ளமுடியும். அதனால் மற்ற எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

“நாளை பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த நிமிடம் பற்றித்தான் யோசிக்கிறேன். பாலிவுட்டை பற்றியும் யோசிக்கவில்லை. எந்த இயக்குநராவது அழைத்தால் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு பச்சைக்கொடிதான்,” என்கிறார் அமலா பால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி