மருத்துவரை இரண்டாம் திருமணம் புரிந்த விஜய் 

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் இரண்டாவது திருமணம் எளி மையாக நடந்து முடிந்தது. ஏ.எல். விஜய் மருத்துவர் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார். இவர்களது திருமணம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் காலை நடந்தது.

விஜய் பட்டு வேட்டி சட்டையும் ஐஸ்வர்யா பட்டுச்சேலை சட்டையும் அணிந்திருந்தனர். 

வைதீக முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது. திருமணத்தை கைபேசியில் படம்பிடிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர். 

மணமக்களை நடிகர் ஆர்யா தனது மனைவி சாயிஷாவுடன்  நேரில் வந்து வாழ்த்தினார்.

நடிகர் பொன்வண்ணன், இயக் குநர்கள் பார்த்திபன், மோகன் ராஜா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கமீலா நாசர், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட் டோரும் நேரில் வாழ்த்தினர். 

அஜித்குமாரின் ‘கிரீடம்’ படத் தின் மூலம் இயக்குநராக அறிமுக மானவர் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழ கப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘பொய் சொல் லப்போறோம்’, ‘மதராசபட்டினம்’, ‘தலைவா’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். 

‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபாலை ஏ.எல். விஜய் காதலித்து மணந்தார். 

பின்னர் இவர்களுக்கு இடையே  கருத்து வேறுபாடு ஏற் பட்டு 2017ல் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்தனர்.

அதன்பிறகு விஜய் தொடர்ந்து படங்களை இயக்கிவந்தார். அவ ருக்கு சென்னை மண்ணிவாக்கத் தைச் சேர்ந்த ராஜன்பாபு-அனிதா வின் மகள் ஐஸ்வர்யாவை விஜய் யின் பெற்றோர் 2வது திருமணம் செய்து வைத்துள்ளனர்.   

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’