விஜய் படத்தில் சிறு வேடத்தில் நடிக்கவும் தயார் என்கிறார் இளம் நாயகி மோனிகா

அண்மையில் வெளியான ‘ஜீவி’ படம் ரசிகர்களின் பாராட்டு களைப் பெற்றுள்ளது. இதில் நாயகியாக நடித்துள்ள மோனிகா சின்னகோட்லாவுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள். 

தற்போது ‘தொட்டுவிடும் தூரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மோனிகா. இது முழுக்க முழுக்க காதலும் வணிக ரீதியிலான அம்சங்களும் கொண்ட படமாம். 

நாட்டு நலப்பணி திட்டத்துக் காக சென்னையில் இருந்து மாண விகள் குழு ஒன்று குக்கிராமத் துக்குச் செல்கிறது. அதே கிரா மத்தில் மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றும் இளைஞர் மக்க ளுக்குப் பல்வேறு வகையிலும் உதவி வருகிறார். 

மாணவிகளில் ஒருவர் இவரைச் சந்திக்க நேர்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர்  நன்கு புரிந்துகொள்ளவே நட்பு காதலாக மாறுகிறது. 

வந்த வேலை முடிந்து சென்னை திரும்பும் காதலியைத் தேடிச் செல் கிறார் காதலர். இருவரும் வாழ்க் கையில் இணைந்தனரா என்பது மிச்ச மீதிக் கதை. 

இதில் கதை நாயகனாக விவேக்ராஜ் நடித்துள்ளார். இவரை ஏற்கெனவே ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘பேரழகி ஐ.எஸ்.ஓ.’ உள்ளிட்ட படங்களில் பார்த்திருக்க முடியும்.

“இந்தப் படத்தில் எனது திறமையை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பு இருந்தது. இயக்கு நர் நாகேஸ்வரன் சார் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். ஒரு கதாபாத்திரத்துக்கு எத்தகைய நடிப்பு தேவையோ அதை நம்மிடருந்து கச்சிதமாகப் பெற்றுவிடுவார். அந்த வகையில் அவர் ஒரு மாயாஜால இயக்குநர் என்பேன். 

“ரசிகர்கள் தங்களது கவலை களை மறந்து 2 மணி நேரம் உற்சாகமாக இருக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. அதனால் தயக்கமின்றி திரையரங் குக்கு வரலாம்,”  என்று சொல்லும் மோனிகா, தற்போது ‘தோழர் வெங்கடேசன்’, ‘டைம் இல்ல’ உள்ளிட்ட நான்கைந்து படங்களில் நாயாகியாக நடித்துக்கொண்டி ருக்கிறார். 

நடிகர் விஜய்தான் இவருக்குப் பிடித்தமான நாயகனாம். விஜய்க்கு தங்கையாக மட்டுமல்ல, அவரது படத்தில் சிறு கதாபாத்திரம் அளித்தாலும் நடிக்கத் தயார் என்கிறார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’