இரண்டாயிரம் முதலைகள் நடித்த படம்

‘ஆண்கள் ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 2,000 முதலைகளை வைத்து முக்கிய காட்சிகளை எடுத்துள்ளனராம். இந்த முதலை சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளார் தயாரிப்பாளர். 

மொத்த முதலைகளையும் 15 நாட்களுக்கு ஒரே இடத்தில் வைத்து, கோழி, ஆட்டிறைச்சி என்று டன் கணக்கில் உணவு படைத்திருக்கிறார்கள். 

படத்தின் இறுதிக் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாகச் சேர்ந்து வருமாம். இந்தக் காட்சியைத் திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் முத்து மனோகரன். 

இதில் மகிரா, ரேஷ்மி, சங்கீதா, ஐஸ்வர்யா என 4 நாயகிகள். முருகானந்தன், மூர்த்தி, இளங்கோ, ஜெமினி ராகவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 

“இவ்வளவு முதலைகள் நடித்திருப்பதால் படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். திரையில் காட்சிகளைக் காணும்போது சிலிர்த்தும் மிரண்டும் போவீர்கள்,” என்கிறார் இயக்குநர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி