புதுப் படத்தில் புது ஜோடி

புதுப் படத்தில் புது ஜோடி

1 mins read
d468c0da-20dc-49a9-b910-ab2eacf8fc8c
ஸ்ரேயா -

ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் 'சண்டக்காரி - தி பாஸ்'. இதில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா.

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி பெரும் வெற்றி பெற்ற 'மை பாஸ்' என்ற படத்தை தழுவி தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப வழங்க உள்ளனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தகட்டமாக கொச்சி், கோவா, காரைக்குடி போன்ற இடங்களில் முக்கிய காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.

அம்ரீஷ் இசையமைக்க, கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுள்ளார் மாதேஷ்.

பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

"விமலுக்கும் ஸ்ரேயாவுக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக உள்ளது. ஸ்ரேயாவின் திரைப் பயணத்தில் இது முக்கியமான படமாக இடம்பெறும். விமலின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்," என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநர் மாதேஷ்.