கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அனுபமா. இது தெலுங்கு படம் ஒன்றின் மறுபதிப்பாம்.
முதன்முறையாக பரதநாட்டிய கலைஞராக திரையில் தோன்றுகிறார் அனுபமா.
நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் வெற்றி பெற்ற படம் 'நின்னு கோரி'. இதை சில மாற்றங்களுடன் தமிழ் ரசிகர்களுக்காகப் படமாக்குகிறார் கண்ணன்.
"கதைப்படி, முனைவர் பட்டம் பெற்ற இளைஞராக நடிக்கிறார் அதர்வா. பரதநாட்டிய கலைஞர் வேடம் என்றதும் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டார் அனுபமா.
"இதில் வைபவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ரசிகர்களின் பாராட்டை நிச்சயம் இக்கதாபாத்திரம் பெற்றுத் தரும்," என்கிறார் இயக்குநர் கண்ணன்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

