தமிழில் உருவாகும் 'மார்க்கெட் ராஜா' படத்தில் முத்தக்காட்சி ஒன்றில் நடித்திருப்பதாகக் கூறி ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார் நடிகை நிகிஷா படேல்.
சரண் இயக்கத்தில் ஆரவ் நாயகனாக நடிக்கும் படம் இது. அவரது ஜோடியாக நடிக்கிறார் நிகிஷா.
படத்தில் முத்தக்காட்சி இருப்பதை சரண் முன்பே கூறிவிட்டாராம். மிக முக்கியமான காட்சி என்பதால் நிகிஷாவும் அதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
"இந்தக் காட்சி எந்த விதத்திலும் ஆபாசமாக இருக்காது. ரசிகர்கள் நிச்சயம் முகம் சுளிக்க மாட்டார்கள். நான் சினிமா துறையை மிகவும் விரும்புகிறேன். அதனால்தான் நடிக்க வந்திருக்கிறேன். எனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன்," என்கிறார் நிகிஷா.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் நடித்து வரும் இவர், குறைவான சம்பளமே கேட்கிறாராம். இதனால் அதிக வாய்ப்புகள் தேடி வருவதாகத் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது,

