இளம் நாயகன் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாக உள்ள புதுப்படம் 'கண்ணாடி'. ஆன்யா நாயகியாக அறிமுகமாகி உள்ளார். ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கியுள்ளார். இது இளைஞர்களைக் கவரும் படமாக உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் தமக்கு நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என நம்புவதாகச் சொல்கிறார் சந்தீப் கிஷன்.

