இணையத் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்து முன்னணி நடிகைகளும் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சமந்தாவும் இணையத் தொடரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இரு மொழிகளிலும் அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'ஓ பேபி' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இணையத் தொடரில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.
நடிகர்கள் பிரசன்னா, பாபிசிம்ஹா, பரத், ராணா உள்ளிட்டோர் திரைப்படங்களுக்கு மத்தியில் இணையத் தொடர்களிலும் நடித்து வருகின்றனர்.
இத்தகைய தொடர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து கேள்விப்பட்ட சமந்தாவும் இணையத் தொடரில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார். அண்மையில் முன்னணி இயக்குநர் கூறிய கதை அவருக்குப் பிடித்துப் போனதாம்.
அவர் இணையத் தொடரில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும்.

