இருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'

இருட்டு என்றாலே பயந்து ஓடும் கதாநாயகன் காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார். இந்நிலையில் 'வி-1' (V-1) என்ற கதவிலக்கம் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அதுகுறித்து விசாரிக்கிறார் நாயகன். இருளைக் கண்டு பயந்தோடும் அவரால் இக்கொலை தொடர்பாக துப்புத் துலக்க முடிந்ததா, கொலைகாரன் சிக்கினானா? என்பதுதான் 'வி-1' படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் பாவெல் நவகீதன். இவர் 'வடசென்னை', 'பேரன்பு', 'மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறும்படங்களும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராம் அருண் நாயகனாகவும் விஷ்ணுபிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்