வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் 'உணர்வு'

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் 'உணர்வு'

1 mins read
350b6455-9c10-4e20-b183-458586357a11
'உணர்வு' படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம் -

சுப்பு இயக்கத்தில் புதுமுகங்கள் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உணர்வு'.

இது உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் சுப்பு.

அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானது. வழக்கமாக அதிரடி வசனங்கள், ஆர்ப்பரிக்கும் பின்னணி இசையோடு முன்னோட்டத் தொகுப்பு வெளியாகும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக எந்தவித வசனங்களும் இல்லாமல் உணர்வு முன்னோட்டம் வெளியானது.

இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். வெளியீடு காணும் முன்பே பல உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது இப்படம். டேவிட் ஜான் ளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் சுமன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.