'பிக்பாஸ் பஜாரி'யாக இருப்பதில் இவருக்குப் பெருமை

'பிக்பாஸ் பஜாரி'யாக இருப்பதில் இவருக்குப் பெருமை

1 mins read
b02024b1-768f-433c-8b72-f00113cfba5c
-

'பிக் பாஸ் 3'லிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் பஜாரியாக இருப்பது குறித்து பெருமை அடைவதாகத் தெரிவித்தார். நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவை பார்வையாளர்கள் சிலர் இவ்வாறு வர்ணித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவத்தில் கசப்பும் இனிப்பும் கலந்திருப்பதாக வனிதா இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். நிகழ்ச்சியில் வெற்றிபெற பங்கேற்கவில்லை என்றும் ஒரு அனுபவத்திற்காகத்தான் பங்கேற்றதாகவும் அவர் கூறினார். விரைவில் வெளியானதால் இப்போது தமது தனிப்பட்ட வாழ்க்கையின்மீது அதிக கவனம் செலுத்த முடிவதாக அவர் கூறுகிறார். நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலர் போலித்தனமாக இருப்பதாகவும் வனிதா சாடியுள்ளார்.