தமிழ் நாயகி இந்துஜா: திறமை இருந்தால் நிச்சயம் வாய்ப்பு தேடி வரும்

‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமான தமிழ் நடிகை இந்துஜாவின் காட்டில் வாய்ப்பு மழை கொட்டித் தீர்க்கிறது.

மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் என அடுக்கடுக்காக படங்களில் நடித்துவிட்ட இந்துஜா, தற்போது விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 

துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு இப்போது சினிமா வாய்ப்பு குவிகிறது.

“குறும்படங்களுக்கும் சினிமாவுக்கும் நேரம் மட்டுமே வித்தியாசம்; மற்றபடி இரண்டும் ஒன்றுதான். ஒரே மாதிரியான உழைப்புதான் தேவைப்படுகிறது.

“மற்ற மாநிலத்தவரைக் காட்டிலும் தமிழ் பேசுபவர்களுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்கெனவே இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. 

“திறமை, நடிப்புக்கேற்ற உடல்வாகு இருந்தால், நிச்சயம் நம்மைத் தேடி வாய்ப்பு வரும். மொழி பேதம் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,’’ என்கிறார், இந்துஜா.

இதற்கிடையே, இந்துஜா இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது. இந்துஜா அதிரடி பெண்ணாகவும் சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார்.

‘ஆண்மை தவறேல்’ படம் மூலம் அறிமுகமான துருவா இதில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் துருவா இணை தயாரிப்பாளராக இருக்க, ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. 

“90களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்தி ருக்கிறார் இந்துஜா,” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த நாயகன் துருவா, இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்,” என்றார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’